Tag: healthbenefits
இந்த 8 பிரச்சினை இருக்கா? தப்பி தவறி கூட திராட்சை பக்கம் போகாதீங்க!
பச்சை, கருப்பு, பன்னீர் அப்படின்னு திராட்சைகள் பலவிதம். பொதுவாவே மத்த பழங்கள் பிடிக்காதவங்க கூட திராட்சையை விரும்பி சாப்பிடுவாங்க. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், விட்டமின்ஸ் மற்றும் மினரல்கள் நிறைஞ்ச திராட்சையில உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாவே இருக்கு. நன்மைகள் நிறையவே இருந்தாலும் உடல்ல குறிப்பிட்ட சில பாதிப்பு இருக்குறவங்க திராட்சையை சாப்பிடும்போது எதிர்மறையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் அப்படின்னு மருத்துவ உலகம் எச்சரிக்கை கொடுக்குது.
யாரெல்லாம் திராட்சையை தவிர்க்கணும்? அப்படின்றத தான் இந்த செய்தி வீடியோவுல நாம தெரிஞ்சுக்க போறோம். திராட்சை பழங்கள்ல Salicylic Acid இருக்கு. இந்த acid செரிமான பிரச்சினை இருக்குறவங்களுக்கு மேலும் அந்த பிரச்சினையை அதிகப்படுத்தலாம். அடி வயிற்று வலி, வயிற்று மந்தம், வாயுப்பிரச்சினை மாதிரியான சிக்கல்களை Salicylic Acid அதிகரிக்க வாய்ப்பு இருக்குறதால, ஏற்கனவே வயிற்று பிரச்சினை இருக்குறவங்க திராட்சைகளை தவிர்த்துடுறது நல்லது. இயற்கையாகவே சக்கரை அளவு அதிகமா இருக்குற திராட்சையில கலோரிகளும் அதிகம்.
அதுனால உடல் எடையை குறைக்க முயற்சி செஞ்சுட்டு இருக்குறவங்களும் திராட்சையை தவிர்க்குறது சரியான அணுகுமுறையா இருக்கும். திராட்சையில இருக்க ரெஸ்வெராட்ரோல் கருவோட கணைய வளர்ச்சியை பாதிக்கலாம்னு ஒரு ஆய்வுல குறிப்பிடப்பட்டிருக்கு. ஆனா, ஒரே நேரத்தில அதிகமான அளவுல திராட்சை சாப்பிடுறது தான் பாதிப்பை ஏற்படுத்தும்னு கூறப்படுது. 6 முதல் 12 மாதங்கள் கொண்ட குழந்தைகளுக்கு திராட்சை கொடுத்தா மூச்சுத்திணறல் ஏற்படும் என்பதால அதை தவிர்த்துடலாம்.
ஒவ்வாமை இருக்குறவங்க திராட்சை சாப்பிடும்போது சரும அரிப்பு, எரிச்சல் - இதெல்லாம் வர்றதுக்கு வாய்ப்பு அதிகம் என்பதால ஒவ்வாமை இருக்குறவங்க இதை சாப்பிடுறதால பல உடல் உபாதைகள் ஏற்படலாம். கிட்னி கல் மற்றும் கிட்னியில் வேறு பிரச்சினை இருக்குறவங்களும் திராட்சையை தவிர்க்கணும் என்பதே மருத்துவர்களின் பரிந்துரையா இருக்கு. இருமல், தலைவலி, வாய் வறட்சி இருக்கும் போது திராட்சை சாப்பிடுவது சளியை அதிகமாக்கும் என்பதால அதை தவிர்க்குறது நல்லது என்பதே உணவியல் நிபுணர்களின் கருத்தா இருக்கு.