2வது T20 போட்டி : இலங்கை த்ரில் வெற்றி

735
t20
Advertisement

இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில், இலங்கை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இதனால் டி20 தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில், டி20 தொடரை வெல்லப்போகும் அணியை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசசை தேர்வு செய்தது.

Advertisement

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் தவான் – ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.

அறிமுக போட்டியில் களமிறங்கிய கெய்க்வாட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தவான் 40 ரன்னிலும், மற்றோரு அறிமுக வீரர் படிக்கல் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி, இரண்டு பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் டி20 தொடரை வெல்லப்போகும் அணியை தீர்மானிக்கும் கடைசி போட்டி, இன்று நடைபெற உள்ளது.