பாலாவுக்காக 18 வருடம் காத்திருந்த சூர்யா

302
Advertisement

இயக்குநர் பாலாவுக்காக 18 ஆண்டுகள் காத்திருந்ததாக நடிகர் சூர்யா தனது ட்டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் பாலா நடிகர் சூர்யா கூட்டணியில் பெயரிடப்படாத படம் ஒன்று உருவாகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கியது. 45 நாட்கள் நடைபெற்ற உள்ள இந்தப் படப்பிடிப்பு மீனவர்களின் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியும், முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் அறிமுக நடிகை மமிதாவும் நடிக்கவுள்ளனர்.

இப்படப்பிடிப்பு குறித்து நடிகர் சூர்யா தனது ட்டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். அதில், எனது வழிகாட்டியான இயக்குநர் பாலா எனக்கு அதிரடியாக மீண்டும் ஆக்சன் என்று சொல்வதற்காகக் காத்திருந்தேன். 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.