இன்னைக்கு Supermoon  சூப்பரா தெரியப்போகுது

326
Advertisement

ஒரே வட்டப்பாதையில், இயல்பான இடைவெளியை விட பூமிக்கு அருகில் நிலா இருக்கும் போது நிகழ்வது தான்  சூப்பர்மூன்.

நாசா அளித்த தகவலின் படி, இன்று இரவு தோன்றும் சூப்பர்மூனை அடுத்த மூன்று நாட்களுக்கு காண முடியும்.

மிகவும் முழுமையாக, அழகாக மற்றும் பிரகாசமாக தெரியும் சூப்பர்மூனை  வருடத்தில் நான்கு முறை பார்க்கலாம்.

இன்று தெரிய உள்ள சூப்பர்மூன் இந்த வருடத்தின் மூன்றாவது சூப்பர்மூனாக உள்ள நிலையில், அடுத்த சூப்பர்மூன் ஆகஸ்ட் மாதம் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக் (Buck) என அழைக்கப்படும் ஆண் மானுக்கு கொம்பு முளைக்கும் காலகட்டத்தில் வருவதால், ஜூலை மாதம் தெரியும் சூப்பர்மூனுக்கு பக் மூன் என்ற பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.