கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை

372

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மதுவானைமேடு துறிஞ்சிக்கொல்லையை சேர்ந்தவர் செல்வக்குமார்.

இவர் உளுந்தூர்பேட்டையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 1-ம் தேதி கடலூர் வந்த இவர் நீதிமன்றம் அருகே திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப செலவுக்காக 5 லட்ச ரூபாய் கந்து வட்டிக்கு கடன் வாங்கியுள்ளதாகவும், அதனை திருப்பி செலுத்தியும் மீண்டும் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த காவலர் செல்வகுமார், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் அவரது உடல் நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.