கையை கிழித்துக்கொண்டும் ஆணிகளை விழுங்கியும் தற்கொலைக்கு முயன்ற கைதிகள்

prison
Advertisement

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் கையை கிழித்துக்கொண்டும், ஆணிகளை விழுங்கியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக புகார் எழுந்ததை அடுத்து, சோதனை நடத்தி செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிறைத்துறை அதிகாரிகள், தங்களை, குடும்பத்தினரை சந்திக்க விடாமல் செய்வதாக, 50-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் திடீரென உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

அப்போது சிறை கைதிகள் 7 பேர் திடீரென உணவு சாப்பிடும் தட்டுகளால் தங்கள் கைகளில் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.

Advertisement

உடனே அவர்களை மீட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் விசாரணை கைதிகள் ஏழுமலை , ஸ்டீபன் ஆகிய 2 பேரும் சோப்பு மற்றும் ஷாம்பு போன்ற ரசாயன கரைசலை குடித்தனர். சுகன், பிரதீப் ஆகிய இரு கைதிகளும் இரும்பு ஆணிகளை விழுங்கினர்.

தற்கொலைக்கு முயன்ற அவர்களுக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காலாப்பட்டு சிறையில் கைதிகள் அடுத்தடுத்து தற்கொலைக்கு முயன்றதால், சிறையில் பெரும் பரபரப்பு நிலவியது.