திமுகவை தடை செய்து சின்னத்தையும் முடக்கவேண்டும் என்று சுப்பிரமணியசாமி தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்திருப்பதாகக் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பவேண்டிய புகாரை சுப்பிரமணியசாமி டெல்லி மாநில தேர்தல் துணை ஆணையருக்கு அனுப்பியிருப்பதாகக் கூறி தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முகவரியையும் அனுப்பி கிண்டல் செய்திருக்கிறார்.
திமுக நிர்வாகிகளும் இதேபோல் முகவரி தெரியாத சுப்பிரமணியசாமி என்று கிண்டல் செய்துவருகின்றனர்.