இந்தியா ராணுவம் செய்த முன்னோட்டம் மகிழ்ச்சியில் மாணவர்கள்

296

காஷ்மீரில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது.

காஷ்மீரில் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் கல்லூரி படிப்பில் சேர நடத்தப்படும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது. பொது சட்ட சேர்க்கை தேர்வு எனப்படும் CLAT நுழைவுத்தேர்வுக்கான இரண்டரை மாத கால இலவச பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்காக இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது.

இதற்காக மாணவர்களிடம் தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்பட்டு பயிற்சி வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இளைய தலைமுறையினர் கல்வி கற்க இந்திய ராணுவம் எடுத்துள்ள முயற்சிக்கு ரபியாபாத் மற்றும் காசியாபாத் உள்ளூர்வாசிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்த தேர்வு டிசம்பர் 18ம் தேதி தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.