வலிமையாக உள்ள இந்தியா: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

83

கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்தியா, தற்போது வலுவான நிலையில் இருக்கிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் உள்ள இந்தியர்களிடம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் கொரோனா காலத்தை மிகுந்த உறுதியுடனும், தொலைநோக்கு பார்வையுடனும் எதிர்கொண்டதாக குறிப்பிட்டார்.

கொரோனா காலகட்டத்தில் இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பில் பெரிய வளர்ச்சி காணப்பட்டது என கூறிய அவர், கொரோனாவின் போது மிகவும் பாதிக்கப்பட்ட இந்தியா, தற்போது வலுவான நிலையில் இருக்கிறது என பெருமிதம் தெரிவித்தார். மேலும் டிஜிட்டல் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

Advertisement