இடம்பெயரும் குடும்பத்தை  5  கிமீ ஓடி  பின்தொடர்ந்த தெரு நாய்

40
Advertisement

மனிதன் மீதான நாயின் அன்பை உணர்த்தும் உணர்ச்சிப்பூர்வமான வீடியோ ஒன்று  இணையத்தில் வைரலாகி வருகிறது.உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒரு குடும்பம் பல ஆண்டுகளாக வசித்துவந்த வாடகைவீட்டை காலிசெய்து வேறொரு பகுதிக்கு செல்ல தயாராகினர்.

இதற்காக,வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம்  பேட்டரி ரிக்‌ஷா ஒன்றில் வைத்து அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.அவர்கள் வேறு பகுதிக்கு செல்கின்றனர் என்பதை அறிந்த தெருநாய் ஒன்று அவர்கள் வாகனத்தை பின்தொடர்ந்து  ஐந்து கிமீ தூரம் ஓடிச்சென்றுள்ளது.

ரிக்‌ஷா பின்னே  ஓடிக்கொண்டுருந்த நாயை கவனித்த வாகன ஒட்டி ஒருவர் இதனை படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.முதலில் வாகனத்தின் பின் ஓடிக்கொண்டுருந்த நாயை கண்டு ஒன்றும் புரியாமல்,சற்றுத்தூரம் சென்று  ரிக்‌ஷாவில் இருந்த குடும்பத்தை விசாரித்த பின்பு தான் தெரிந்தது.

Advertisement

அந்த குடும்பம் வசித்துவந்த தெருவில்  இருந்த நாய் தான் இது. பல ஆண்டுகளாக சொந்தநாய்போல பழகியதும்,உணவு வழங்கி வந்ததும் , மிகவும் விசுவாசமாக இருந்ததாகவும்.இதற்கிடையில் , அந்த குடும்பம் வீட்டை காலிசெய்து வேறு பகுதிக்கு செல்வதை உணர்த்த இந்த நாய், விடாமல் 5 கிமீ தூரம்வரை பின்தொடந்து ஓடிவந்தது.

நாயின் பாசத்தை  கண்டு உருகிபோனதாகவும், அந்த நாயை தங்களுடன் அழைத்துச்செல்ல உள்ளதாகவும் கூறியுள்ளனர் அந்த குடும்பத்தினர்.