“Storming Operation” – நள்ளிரவில் நடுங்கிய சென்னை ரவுடிகள்

222
Advertisement

Storming Operation என்ற பெயரில் சென்னையில் ரவுடிகளின் வீட்டுக்குள் புகுந்த காவல்துறை அதிகாரிகள், பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதனால் ரவுடிகள் நள்ளிரவில் நடுங்கியப்படியே பொழுதை கழித்தனர்.


கொலை, கொள்ளை என பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் வீடுகளை தொடர்ந்து கண்காணித்து அவர்கள் வீட்டில் உள்ள ஆயுதம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கைப்பற்ற வேண்டும் என காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதன்படி கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள், Storming Operation என்ற பெயரில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க களத்தில் இறங்கினர்.

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் வீட்டில், காவல்துறை அதிகாரிகள் நள்ளிரவு முதல் விடிய விடிய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சாஸ்திரி நகர் மார்க்கெட் அருகில் அமைந்துள்ள இடியாப்ப மணி என்ற ரவுடியின் வீட்டை சோதனை செய்தனர்.

அப்போது, அவரது வீட்டிலிருந்த பட்டாக்கத்தி, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Storming Operation என்ற பெயரில் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது ரவுடிகள் இடையே அச்சத்தையும், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதுபோன்று அதிரடி சோதனை அவ்வப்போது நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குரலும் எழுந்தது.