இந்தோ-பசிபிக்கின் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டும் – அமைச்சர் ஜெய்சங்கர்

51

சர்வதேச சூழ்நிலை மிகவும் சவாலாக உள்ள நிலையில், இந்தோ-பசிபிக்கின் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பென்டகனில் உரையாற்றினார்.

அப்போது, பல்வேறு காரணங்களுக்காக சர்வதேச சூழ்நிலை மிகவும் சவாலாக உள்ள நிலையில், இந்தோ-பசிபிக்கின் ஸ்திர தன்மை, பாதுகாப்பு மற்றும் வளம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.