இலங்கை நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ‘இலங்கைக்கு வாருங்கள்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்தை தென்னிந்தியாவில் ஊக்கப்படுத்தும் வகையில், சென்னையில் வர்த்தகர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இலங்கை நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் இந்த சந்திப்பில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர், இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்றும்
இலங்கைக்கு எப்போதும் உதவும் நாடாக இந்தியா இருந்து வருகிறது எனவும் கூறினார்.
இந்திய பயணிகளை சுற்றுலாவுக்கு ஊக்குவிக்கும் விதமாக 20 டாலருக்கு விசா வழங்கப்படுகிறது என்றும் மே மாதத்தில் இருந்து பயணிகளுக்கான சொகுசு கப்பல், புதுச்சேரியில் இருந்து தலைமன்னாருக்கு மாதத்துக்கு 4 முறை இயக்கப்படும் என தெரிவித்தார்.