ஆடம்பர மாளிகை வேண்டாம்.. வீட்டிலிருந்தே பணி செய்யப் போகிறேன்.. – பிரதமர்

188

இலங்கை பிரதமராக பொறுப்பை ஏற்ற ரணில் விக்ரமசிங்கே தங்குவதற்காக பிரதமர் மாளிகை தயாரானது.

அலரி மாளிகை என்று கூறப்படும் பிரதமர் மாளிகை மிகவும் ஆடம்பரமாக இருக்கும் நிலையில் அந்த மாளிகை தனக்கு வேண்டாம் என்றும் தான் வீட்டிலிருந்தே பணி செய்யப் போவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே தெரிவித்துள்ளார்.

அரசின் செலவினங்களை குறைக்கும் பொறுப்பு தனக்கும் பொருந்தும் என்றும் அமைச்சர்களும் இதனை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.