இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்

242

இலங்கைக்கு 2வது கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

எரிபொருள், உணவுப் பொருட்கள், உணவு, பானம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட மக்கள் வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். அங்கு தினமும் 15 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருக்கிறது.

இலங்கை  மக்களுக்கு உதவ தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இலங்கைக்கு 2வது கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கும் பணியை அமைச்சர்கள் சக்கரபாணி, செஞ்சி மஸ்தான், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து VTC SUN கப்பல் மூலம் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு செல்கின்றன.

தென்காசி, நெல்லை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

14,700 டன் அரிசி, 250 டன் பால் பவுடன், 60 டன் மருந்து உள்பட மொத்தம்  15,010 டன் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.