இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்

393

இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதும் முதல் T-20 போட்டி டெல்லியில் இன்று தொடங்க உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட T-20 தொடரில் விளையாட உள்ளது.

இந்திய அணியில், கே.எல்.ராகுல் தலைமையிலான 18 பேர் கொண்ட குழுவை பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் T-20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி கேப்டனாக நியமிக்கப்பட்ட கே.எல்.ராகுல் மற்றும் இடது கை பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.