இறுதிப்போட்டிக்கு தகுதியான நபர்கள்

181

பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில், இகா ஸ்வியாடெக், கோகோ கோவ் ஆகியோர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்யைர் பிரிவு அரையிறுதி போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக்கும், ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினாவும் மோதினார்.

இதில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் கோகோ கோவ், இத்தாலியின் மார்ட்டினா ட்ரெவிசன் ஆகியோர் மோதினர்.

இதில் கோகோ கோவ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப்ப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை கோகோ கோவ் இருவரும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.