இந்தோனஷியா தலைநகர் ஜகார்த்தாவில் 11வது ஆசிய கோப்பை ஆக்கிப்போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், சூப்பர்-4 சுற்றின், கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்கொரியாவுடன் பலப்பரிட்சை நடத்தியது.
ஜப்பானுக்கு எதிரான போட்டியில் மலேசியா 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதனால் இந்தியா, தென்கொரியா உடனான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியும் என்ற நிலை உருவானது.
இந்த பரபரப்பான சூழல் நடைபெற்ற போட்டியில், இரு அணிகளும் தலா 4 கோல்கள் அடித்ததால், போட்டி சமனில் முடிந்தது.
சூப்பர்-4 சுற்றின் முடிவில் இந்தியா, மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய அணிகள் தலா 5 புள்ளிகளுடன் இருந்தன.
ஆனால், கோல்களின் அடிப்படையில் மலேசியா மற்றும் தென் கொரிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதனால், இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தென் கொரிய அணி மலேசியாவை எதிர்கொள்கிறது.
அதே நேரத்தில் இந்தியா, 3வது இடத்திற்கான போட்டியில் ஜப்பானுடன் மோத உள்ளது.