வாங்கியது 90 பைசா! விற்றது 2 லட்சம்!!

399
spoon
Advertisement

இங்கிலாந்தில் 90 பைசாவுக்கு வாங்கப்பட்ட ஸ்பூன் 2 லட்ச ரூபாய்க்கு விற்பனையான சம்பவம் நடந்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த ஒரு நபர் பயன்படாத காரின் பழைய பாகங்கள் விற்பனை செய்யும் தெருவோரக்கடையில் நொறுங்கிப்போன நிலையில் இருக்கும் பழைய ஸ்பூன் ஒன்றை கண்டுள்ளார்.

அது சற்று வித்தியாசமாக இருப்பதை பார்த்து 90 பைசா கொடுத்து வாங்கியுள்ளார்.

Advertisement

பின்னர் பழமையான பொருட்களை ஏலம் விடும் நிறுவனத்தை அணுகி அந்த ஸ்பூனை சோதனை செய்துள்ளார்.

நொறுங்கிபோய் வளைந்த நிலையில் இருந்த அந்த ஸ்பூன் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளி ஸ்பூன் என்பது சோதனையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து பழமைவாய்ந்த அந்த ஸ்பூன் ஆன்லைன் ஏலத்தில் வைக்கப்பட்டது.

தொடக்க விலையாக 51,712 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது.

13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பூன் என்பதால் அதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. படிப்படியாக விலை ஏறி, இறுதியாக 1 லட்சத்து 97 ஆயிரத்திற்கு ஸ்பூன் விற்கப்பட்டது. அத்துடன் வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் சேர்த்து ஸ்பூனின் விலை 2 லட்சத்தை தாண்டியது.

90 பைசா கொடுத்து ஸ்பூனை வாங்கியவர் வெள்ளி வியாபாரி கிடையாது.ஆனால் பழமையான பொருள் என்பதை கண்டறிந்து வாங்கியதால் அவருக்கு யோகம் அடித்துள்ளது.

silver spoon