டெல்லிக்கு பறந்து விமானத்தில் நடுவானில் தீ பிடித்து எரியும் காட்சி 

39
Advertisement

பாட்டனாவிலிருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் இன்ஜினில்  நடுவானில் தீ பிடித்து எரிந்ததால் , அவசர அவசரமாக பாட்னா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இன்று காலை பாட்டனாவிலிருந்து ஸ்பைஸ்ஜெட் SG723 விமானம் 185 பயணிகளுடன் டெல்லி புறப்பட்டது.விமானம் புறப்பட்டு  சிறிது நேரத்தில் இடது பக்க இன்ஜீனில் தீ பிடித்தது.இதனை கவனித்த  உள்ளூர்வாசிகள் , மாவட்ட மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, டெல்லி செல்லும் விமானம் பாட்னா விமான நிலையத்திற்கு திரும்பியது.

சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், விமானம் 185 பயணிகளுடன் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.இது குறித்து பாட்னா விமான நிலைய இயக்குனர் கூறுகையில், “பாட்னாவில் இருந்து டெல்லிக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஒரு இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமானம் பத்திரமாக தரையிறங்கியது என தெரிவித்தார்.வானில் தீ பிடித்து எறிந்த படி பறந்து சென்ற விமானத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement