சென்னை-மைசூரு இடையிலான வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது…!

25
Advertisement

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை-மைசூரு இடையிலான 5வது வந்தே பாரத் ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

தற்போது, சென்னை-மைசூரு இடையிலான வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை சென்டிரலில் இருந்து அதிகாலை 5.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் 7.13 மணிக்கே காட்பாடியை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை-மைசூரு இடையிலான அனைத்து வந்தே பாரத் ரயில்களின் பயணம் குறைப்பு அறிவிப்பு, வருகின்ற 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.