சோனியாகாந்திக்கு கொரோனா

316

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சோனியாகாந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் தினசரி கொரோனா அதிகரித்து வரும்நிலையில், சோனியாகாந்திக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.