ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தந்தையை லோடு வண்டியில் கொண்டு சென்ற மகன்., அடுத்து நடந்த பரிதாபம்

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தில், உயிருக்கு போராடிய தந்தையை, ஆம்புலன்ஸ் கிடைக்காததால் லோடு வண்டியில் ஏற்றி, CPR செய்து கொண்டே மகன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அவர்கள் மருத்துவமனை சென்றடைந்தபோது, மருத்துவர்கள் பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இறப்புச் சான்றிதழில் மாரடைப்பு மரணத்திற்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் வசதி உடனடியாக கிடைக்காததால், குடும்பத்தினர் ஒரு சரக்கு வாகனத்தை ஏற்பாடு செய்து மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் மருத்துவமனைக்கு செல்லும் பாதை தாமதமானதாலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.