15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

706
death
Advertisement

சோமாலியாவில் அல் சபாப் இயக்கத்தை சேர்ந்த 15 பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

சோமாலியா நாட்டில் சமீப காலமாக அல் சபாப் இயக்க பயங்கரவாதிகள் மண்ணில் நில கண்ணிவெடிகளை புதைத்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களை தேடும் பணியில் சோமாலிய தேசிய ராணுவம்
ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், மடபான் மாவட்டம் மதூய் கிராமத்தில் உள்ள பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை இலக்காக கொண்டு அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியது.

Advertisement

இந்த தாக்குதலில் அல் சபாப் இயக்கத்தை சேர்ந்த 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக சோமாலியா ராணுவ தெரிவித்துள்ளது.