வகுப்பறையில் மாணவியின் காலை சுற்றிக்கொண்ட பாம்பு

40
Advertisement

அரசு பள்ளி ஒன்றில் ,வகுப்பறையில் மாணவியின்  காலை பாம்பு ஒன்று சுற்றிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் உள்ள மங்காரா அரசு மேல்நிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி திங்களன்று வழக்கம் போல்  பள்ளி வந்துள்ளார்.பின்,வகுப்பிற்குள் நுழைந்த சிறுமி,வழியில் படுத்திருந்த பாம்பை தவறுதலாக மிதித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

அந்நேரத்தில் அந்த பாம்பு அந்த  சிறுமின் காலைச் சுற்றிக் கொண்டது எனவும்  சிறுமி பாம்பை அப்புறப்படுத்த காலை அசைத்தபோது, அது அருகில் இருந்த அலமாரியில் விழுந்ததாகத் தெரிகிறது.இதையடுத்து ,அந்த சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் சிறுமிக்கு  பாம்பு கடித்தபடி எந்த அடையாளமும் இல்லை என்றும், அவர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement