Friday, August 8, 2025
HTML tutorial

இந்திய சின்னத்திரை வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் ஸ்மிருதி ரானி ; எவ்வளவு தெரியுமா?

சின்னத்திரை தொடர்களில் கலக்கிய ஸ்மிருதி இரானி, கடந்த 2003-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், 2014 முதல் 2024-ம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக பதவி வகித்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். இதனால் அவரின் அமைச்சர் பதவி பறிபோனது. இதையடுத்து ஸ்மிருதி இரானி மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார். அந்த வகையில் தனக்கு பெரும் பெயரை வாங்கி கொடுத்த ஏக்தா கபூரின் ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி’ என்ற தொடரின் இரண்டாம் சீசனில் அவர் மீண்டும் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்மிருதி இரானியின் சம்பளம் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி, ஒரு எபிசோட்டுக்கு ரூ.14 லட்சத்தை ஸ்மிருதி இரானி சம்பளமாக பெறுகிறாராம். இந்திய சின்னத்திரை வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்துள்ளார், ஸ்மிருதி இரானி.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News