SK Production தெரியும் … இது  என்ன புதுசா SRK ஓடிடி-னா ?

211
Advertisement

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அந்தப்பதிவில், “ ஜீன்ஸ் ஜாக்கெட், கூலிங் கிளாஸூடன் தம்ஸ் அப் காட்டும் புகைப்படத்தை பதிவிட்ட அவர் ஓடிடி தளத்தில் வித்தியாசமான ஒன்று விரைவில் நடக்க இருக்கிறது என்று சஸ்பென்ஸ் வைத்தார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அது என்னவாக இருக்கும் கமெண்டுகளை ஒரு பறக்க விட, நடிகர் சல்மான் கான் இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, “ இன்றைக்கு பார்டி உங்களுடையது. உங்களுடைய புதிய ஓடிடி ஆப் SRK+ ற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என்று மொத்த சஸ்பென்ஸையும் பொதுவெளியில் போட்டு உடைத்து விட்டார்.

 சில நொடிகள் சஸ்பென்ஸிலேயே சென்றது. அதனால் அதை என்ன என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார் சல்மான் கான்.இதனைத்தொடர்ந்து பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ கனவு நனவாகியது. அவரின் புதிய ஓடிடி ஆப்பில் அவருடன் இணைந்து பணியாற்றுகிறேன்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.