சிக்ஸர்.. ஸ்டாலின் சொன்ன வாக்குறுதி.. அப்படியே நிறைவேற்றும் செந்தில் பாலாஜி.. மக்களுக்கு குட் நியூஸ்

110
Advertisement

தமிழ்நாட்டில் திமுக கொடுத்த பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முக்கியமான ஒரு தேர்தல் வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போது திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று மகளிர் உதவித்தொகை தொடர்பானது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்து இருந்தது.

இதற்கான லிஸ்ட் எடுக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் மாதம் அண்ணாவின் பிறந்த நாளில் இருந்து இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. பெண்கள் இடையே இந்த திட்டம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.