சிவகங்கை: நேற்றிரவு பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது

376

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்றிரவு பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது,. திருப்பத்தூர், மதகுபட்டி, கொல்லங்குடி, காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. கனமழையால் சாலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம், படியூர், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் தமிழக்ததின் பல மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.