கோபித்துக்கொண்ட தம்பியை சமாதானம் செய்த  அக்கவின் செயல் 

58
Advertisement

தாய்-மகன்  உறவுக்கு ஈடான ஒன்று  அக்கா-தம்பு உறவும்.இதனை உணர்த்தும் பல தருணங்கள் நம் வாழ்வில் கடந்துசெல்லும்.இந்நிலையில் , சகோதரத்தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்காததால் கோபித்துக்கொண்டு தம்பியிடம் மன்னிப்பு கேட்கும்விதம்   434 மீட்டர் நீளமுள்ள கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் சகோதரி ஒருவர்.

கேரளாவை  சேர்ந்த கிருஷ்ணப்ரியா என்ற பெண், சகோதரர் தினத்தன்று அவர் வேளையில் பிசியாக இருந்ததால் அவரின் தம்பிக்கு வாழ்த்து கூற மறந்துவிட்டாராம்.இதனால் கோபித்துக்கொண்டு அவரின் சகோதரர் , கிருஷ்ணப்ரியாவை வாட்ஸ் அப்பில் பிளாக் செய்து விட்டதால்,வருத்தமடைந்தார் கிருஷ்ணப்ரியா.

Advertisement

தம்பியிடம் மன்னிப்பு கேட்கும் வகையில், சுமார் 5 கிலோ எடையுள்ள பில்லிங் ரோலில் 434 மீட்டர் நீளமுள்ள கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை எழுத 12 மணி நேரம் பிடித்ததாக கிருஷ்ணப்ரியா கூறுகிறார் மேலும் இந்த கடிதத்தை  உலக சாதனைக்கு பரிந்துரைத்து கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.