பொடுகு தொல்லை இனி இல்லை! நச்சுனு நாலு டிப்ஸ் 

194
Advertisement

முடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக அமையும் பொடுகு, தலையில் இருந்து உதிர்ந்து தன்னம்பிக்கையையும் குலைக்கிறது. சிக்கலான இந்த பிரச்சினையை தீர்க்க சற்றே சமையலறை வரை நடந்தால் போதும்.

எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணையை இரண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு எடுத்து கலந்து, தலையில் மசாஜ் செய்து 20 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

பிறகு வழக்கம் போல ஷாம்பூ தேய்த்து குளித்தால் பொடுகு குறைவதோடு முடியும் பளபளப்பாகும். தயிரை தடவி  அதே போல ஒரு மணிநேரம் ஊறவைத்து குளித்தால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். தயிர் குளிர்ச்சி என்பதால் சைனஸ், ஆஸ்துமா மற்றும் ஒற்றை தலைவலி இருப்பவர்கள் இந்த முறையை தவிர்த்து விடவும்.

இறந்த செல்களை நீக்க உதவும் baking சோடா பேக் போட்டு தலைக்கு குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். அதிக நேரம் தலையில் வைத்திருந்தால் தலை சருமம் வறண்டு விடும் என்பதால் கவனமாக கழுவி விட வேண்டும்.

பொடுகை உருவாக்கக்கூடிய பாக்டீரியாக்களுடன் எதிர்த்து போராடும் tea tree எண்ணெயை ஐந்து நிமிடங்கள் வரை தலையில் ஊறவைத்து பின் குளிப்பதாலும் பொடுகு தொல்லையை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.