டீ அல்லது காபி குடிக்காமல் பலருக்கும் காலைப் பொழுது விடிவதில்லை.
அதே போல, மாலை நேரங்களில் திண்பண்டங்கள் சாப்பிடும் போது டீ, காபி குடிப்பதும் பலரின் வாடிக்கை. ஆனால், நாம் சாதாரணமாக அருந்தும் இந்த பானங்களை அதிகமாக குடிக்கும் போது உடல்நலனுக்கு கேடு விளைவிப்பதாக கூறப்படுகிறது.
டீயின் pH மதிப்பு 6ஆகவும் காபியின் pH மதிப்பு 5ஆகவும் உள்ளது. அமிலத் தன்மை கொண்ட இந்த பானங்களை அருந்தும் போது வயிற்றில் வாயுத் தொல்லை ஏற்படுகிறது. அதிக அளவில் பருகி வந்தால் அல்சர் தொடங்கி புற்றுநோய் பாதிக்கும் அபாயம் வரை உள்ளது.
காபி அல்லது டீ குடிக்கும் முன் சற்றுத் தண்ணீர் குடித்தால் குடலை சுற்றி உருவாகும் பாதுகாப்பு வளையம் அமிலத் தன்மை ஆபத்துகளை குறைக்க உதவுகிறது.
டீ மற்றும் காபியில் உள்ள Tannin அதிக அளவில் உடலில் சேரும் போது குமட்டல், வாந்தி, வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம். டீ அல்லது காபி குடிக்கும் முன் தண்ணீர் குடிப்பதால் உடலின் pH balance பராமரிக்கப்பட்டு, எதிர்மறையான விளைவுகளின் தீவிரம் குறைக்கப்படுவதாக மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.