மருத்துவமனையில் அழுததற்கு ரூ.3100 பில் !-அதிர்ச்சி சம்பவம்

208
Advertisement

உலகில் பல வினோதமான சம்பவங்கள் நிகழ்வது வழக்கமான ஒன்று.சமீபத்தில் இது போன்ற ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நியூயார்க் நகரத்தில் பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாத தன் தங்கையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார்.அங்கு அந்த பெண்ணின் தங்கையை சோதித்ததில்,தங்கை அரிதான நோயை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.இதை அறிந்த அந்த பெண்ணின் தங்கை மருத்துவரின் முன் கண்ணீர் விட்டு அழுது உள்ளார்.

அதன் பின் அந்த பெண்ணின் தங்கைக்கு பல்வேரு பரிசோதனைகள் பேர்கொள்ளப்பட்டது.இதில் என்ன வினோதம் என்றால் பரிசோதனைகள்  செய்ததற்கு மருத்துவமனை ‘பில்’ அளித்து உள்ளது.அந்த பில்லை கண்டு அதிர்ச்சி அடைந்தார் அந்த பெண்.பில்லில் எந்த பரிசோதனைக்கு எத்தனை ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்ற விவரம் ஒன்றின் பின் ஒன்றாக அச்சிடப்பட்டு உள்ளது ,அதில் “நடத்தை மதிப்பீடு” எண்று குறிப்பிட்டு  $ 40 (இந்திய மதிப்பில் 3,098.88) என தெரிவித்துள்ளது மருத்துவமனை.

Advertisement

அதவாது மருத்துவரின் முன் அந்த பெண்ணின்  தங்கை, தான் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் மனம்வருந்தி  அழுதுகொண்டு இருந்ததற்காக இந்த தொகை வசூலிக்கப்படுறது என தெரிவித்துஉள்ளது மருத்துவமனை.இதனை தன்  சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்  அந்த  பெண் , மேலும் இந்த தொகையை  இன்சூரன்ஸ் மூலம் செலுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் பகிரப்பட்டுள்ள மருத்துவமனை பில்லில்,மற்ற சில பரிசோதைகளுக்கு வசூலிக்கப்பட்ட தொகையை விட , அந்த பெண்ணின்  தங்கை அழுத்தத்திற்க்காக வசூலிக்கப்பட்ட தொகை அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.தற்போது இந்த பெண்ணின் ட்விட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது முதல்  முறை அல்ல முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பரில், பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோது தன் உணர்ச்சியை வெளிப்படுத்தியற்காக தொகை ஒன்று வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.