மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்ற கட்டட கூலி தொழிலாளியின் மகள்

54

கட்டட கூலி தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த  கட்டிட தொழிலாளி மனோகர் என்பவரின் மகளான ரக்சயா கல்லூரி படிப்பை முடித்துள்ளார். சிறு வயது முதலே அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு குடும்ப வறுமையை பொருட்படுத்தாமல்  பகுதி நேர வேலை செய்து தன்னை தயார் படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த ‘மோனோ ஆக்டிங்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதற்காக அவர், அரசு சார்பில் மலேசியா அழைத்து செல்லப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பார் எவர் ஸ்டார் இந்தியா அவார்ட்ஸ் நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் வெற்றிபெற்றார். பின்னர் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டார்.

ஜெய்ப்பூரில் இந்த மாதம் 18-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில், மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று ரக்‌சயா சாதனை படைத்துள்ளார்

Advertisement