குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக போட்டியிடப் போவதில்லை – சரத்பவார் திட்டவட்டம்

158

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.

இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நிறுத்த காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய 81 வயதான மூத்த தலைவர் சரத்பவார் தாம் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரசின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தை பொதுவேட்பாளராக நிறுத்தலாம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி கருதுவதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement