“ஆன்லைனில் நீச்சல் தேர்வு” பறிபோன பல்கலைக்கழகத்தின் மானம்

168
Advertisement

உலகம் கொரோனா அச்சுறுத்தலால் முழுமையாக இரண்டு  ஆண்டுகள் முடங்கிருந்தன. முன்களப்பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து,அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்,பொது போக்குவரத்து,கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டது.

பின்பு, கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா படிப்படியாக குறைந்தது. ஆனால்   சீனாவில் மீண்டும் கொரோனா தலைதூக்க ஆரம்பித்துள்ளது.இதனை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அந்நாட்டு அரசு.

Advertisement

இந்நிலையில்,ஷாங்காய் பல்கலைக்கழகம் அதன் நீச்சல் தேர்வு  ஆன்லைனில் நடைபெறும் என்ற அறிவிப்பு அந்நாட்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கோவிட்-19 காரணமாக பல்கலைக்கழக நீச்சல் குளம் மூடப்பட்டிருப்பதாலும், நேரில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டதாலும் மாணவர்கள் தங்கள் 50 மீட்டர் நீச்சல் தேர்வை ஆன்லைனில் எடுக்கலாம் என்று ஷாங்காய் பல்கலைக்கழகம்  டீன் அலுவலகம் அறிவித்தது.

சில சீனப் பல்கலைக்கழகங்களில், நீச்சல் என்பது ஒரு பட்டப்படிப்புத் தேவையாகும், ஏனெனில் இது உடல் தகுதியை மேம்படுத்தும் உயிர்வாழும் திறனாகக் கருதப்படுகிறது.இதுபோன்ற சூழலில் பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பை  அந்நாட்டு சமூக ஊடங்கங்களில் பயங்கரமாக ட்ரோல் செய்துவருகின்றனர் நெட்டிசன்கள்.