Shakespeare-ன் 406-வது நினைவு நாளை முன்னிட்டு “Shakes Ex – 406”

178
Advertisement

இங்கிலாந்து நாட்டின் தேசிய கவிஞர், நாடகவியலர், எழுத்தாளர் Shakespeare-ன் 406-வது நினைவு நாளை முன்னிட்டு “Shakes Ex – 406” – என்ற தலைப்பிலான கண்காட்சியை புதுச்சேரி அருங்காட்சியகம் நடத்தியது.


இக்கண்காட்சியில் 219-ஆண்டுகளுக்கு முந்தைய Shakespeare நாடக புத்தகங்கள், Shakespeare-ன் துன்பியல் நாடகங்கள், 1922-ல் லண்டனில் வெளியிடப்பட்ட “THE WORKS OF WILLIAM SHAKESPEARE” என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 100-க்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள், Shakespeare-ன் 37 நாடகப் பட்டியல், Shakespeare-ரை பற்றிய பல அறிஞர்களின் நூல்கள், அவரது வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள், மற்றும் ஆங்கில அலுவல் மொழி நாடுகளான இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து ஆகிய நாடுகளின் நாணயங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டன.