சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழி சேர்க்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இடம்பெறும். இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது மத்திய அரசு. இந்த செயல் மத்திய அரசின் ஆதிக்க உணர்வையே காட்டுகிறது.
இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பதிலேயே தீவிரமாகவுள்ள மத்திய அரசுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.