தமிழகத்தில் பரவியது புதிய வகை கொரோனா

240
ba.4-virus-in-tamil-nadu
Advertisement

தமிழகத்தில் இருவருக்கு உருமாறிய BA-4 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மா.சுப்பிரமணியன், செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் தாயும், மகளும் BA-ரக கொரோனா வைரஸாஸ் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

தாயாருக்கு BA-2 ரக வைரசும், மகளுக்கு BA-4 ரக உருமாறிய வைரசும் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது என்று தெரிவித்தார்.

ஆப்பிரிக்க நாடுகளில் பரவியிருந்த உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவியிருப்பது ஆச்சரியமளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட இருவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு நோயின் பாதிப்பு குறைந்திருக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த உருமாறிய கொரோனா அதிக அளவில் பரவாது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளி்த்தார்.