ஸ்காட்லாந்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை

187

ஸ்காட்லாந்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்த் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்த நாட்டின் தேசிய சுகாதார சேவை மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் பரவி வருகிறது.

இந்நிலையில், ஸ்காட்லாந்து நாட்டின் முதல் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவரைக் கண்டறிந்துள்ளது.

Advertisement

அவர் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.