கேன்சர் சிகிச்சையில் மிரள வைக்கும் முன்னேற்றம்

389
Advertisement

நியூயார்க் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் ஆராய்ச்சி மையத்தில், அண்மையில் கேன்சருக்கு புதிய மருந்து ஒன்று மருத்துவ சோதனை ஓட்டத்தில் 18 பேருக்கு செலுத்தப்பட்டது.

கோலோரெக்டல் கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த 18 பேருக்கும் டோஸ்ட்டார் லிமாப் என்ற அந்த மருந்து செலுத்தப்பட்டதும், கேன்சர் இருந்த இடம் தெரியாமல் போனது மருத்துவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆய்வில் மருத்துவ குழுவில் ஈடுபட்ட மருத்துவர் லூயிஸ், கேன்சர் மருத்துவ வரலாற்றில், சோதனை ஓட்டத்திலேயே 100 சதவீதம் வெற்றி தந்துள்ள இது போல் ஒரு நம்பிக்கையூட்டும் நிகழ்வை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த புதிய முன்னேற்றம் கேன்சர் சிகிச்சையில் புதிய திருப்புமுனையாக அமையும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.