பிளாஸ்டிக் சாப்பிடும் Superworm

539
Advertisement

ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் சாப்பிடும் புழு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். சோபோபாஸ் மொரியோ (Zophobas Morio) என்ற அறிவியல் பெயரை கொண்ட இப்புழு, பொதுவாக சூப்பர்வார்ம் என அழைக்கப்படுகிறது.

இந்த வகை புழுக்களால் பிளாஸ்டிக்கை சாப்பிட்டு அதை செரிமானமும் செய்ய முடியும் என்பது தான் புதுமையான தகவல். இவற்றின் குடலில் சுரக்க கூடிய புரதமாகிய என்சைம் ஒன்றின் காரணமாக, இந்த புழுக்கள் சாப்பிடும் பிளாஸ்டிக் உடைக்கபட்டு மக்க கூடிய பொருளாக மாறுகிறது.

இது பிளாஸ்டிக்கை  மக்க வைப்பது தொடர்பான ஆய்வில் புதிய நம்பிக்கை அளிப்பதாக கூறும் விஞ்ஞானிகள், அதிக அளவில் புழுக்களை உற்பத்தி செய்வதை விட, பிளாஸ்டிக்கை செரிக்க வைக்கும் அந்த புரதத்தை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுதல் பெருமளவு பலன் தரும் என கருத்து தெரிவித்துள்ளனர்.