1 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான இறுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கல்வித்துறையின் நாட்காட்டியின்படி, இன்று பள்ளிகளுக்கு இறுதி வேலைநாள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு இன்று, ஆண்டு இறுதித்தேர்வின் கடைசித்தேர்வு நடத்தப்படவுள்ளது.
தேர்வை எழுதி முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. கோடை விடுமுறை முடிந்து வழக்கம் போல, ஜூன் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவது குறித்த அறிவிப்பை கல்வித்துறை முடிவு செய்து வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.