இன்று பள்ளிகள் திறப்பு

166

தமிழகத்தில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

மாணவ, மாணவியருக்கு பாடபுத்தகங்களை இன்றே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

முதல் ஒரு வாரத்திற்கு, அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, வரும் 20ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், வரும் 27ஆம் தேதி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்க உள்ளன.