புதுச்சேரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு

196

புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்த நிலையில் விடுமுறை இன்றுடன் முடிவடைந்ததால், 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஒரு வார இடைவெளிக்கு பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர். திட்டமிட்டபடி இன்று காலாண்டு பொதுத்தேர்வு தொடங்கும் என புதுச்சேரி கல்வி அமைச்சர் நவச்சிவாயம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.