தமிழகத்தில் வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளி வளாகம், கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மின் இணைப்புகள் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்துணவு கூடங்களில் மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்குவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.