தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

59

காலாண்டு தேர்வு விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்தது. அதன்காரணமாக மாணவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. அரசு பள்ளிகளில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடைபெறுவதால், அரசு பள்ளிகளில் மட்டும் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement