ஆசிரியரை  கத்தியுடன் மிரட்டிய மாணவன்.. அச்சத்தில் ஆசிரியர்கள் !

440
Advertisement

வீட்டு  பாடம்  எழுதாமல் பள்ளிக்கு சென்றால் ஆசிரியர்  அடித்துவிடுவார் என்ற காலம் மாறி , பள்ளிக்கு சென்றால் மாணவர்கள் கத்தியால் குத்தி விடுவார்கள் என  ஆசிரியர்கள் அஞ்சும் நிலை உருவாக்கி உள்ளது தமிழ்நாட்டில் .முதுகலை பட்டதாரி சங்கத்தினர்  அரசுப் பள்ளி ஆசிரியர்களும்  பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தேனியில் நடந்துள்ளது.

சில தினங்களாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் , அரசு பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரை மிரட்டுகிறான். அதிர்ச்சி அளிக்கும் இந்த மாணவனின் செயல் போன்று பல மாணவர்களும் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது . இதையடுத்து , அச்சத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரி முதன்மைக் கல்வி அலுவுலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது முதல் முறை அல்ல , கொரோன ஊரடங்கிற்கு பிறகு மாணவர்கள் குணத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.  தேனி மாவட்டத்தில்   தேனி,பெரியகுளம் உத்தமபாளையம் என மூன்று கல்வி மாவட்டங்களில்  அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி என 900 க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களால் ஆசிரியர்கள் தாக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது . பெரியகுளம் தேவதானப்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 900 மாணவர்கள் படிக்கின்றனர். அப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் குறிப்பிட்ட சிலர் கடந்த சில நாட்களாக அங்குள்ள ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.‌ மது போதையில் இருந்த ஒரு மாணவன் அரசுப் பள்ளி பெண் ஆசிரியை ஒருவரைத் தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனை கண்டித்த அந்த ஆசிரியை மறுநாளும் அந்த மாணவன்  மதுபோதையில் கத்தியுடன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது போன்று ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் மாணவர்களுக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த சிலரும் ஈடுபட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, முதன்மைகக் கல்வி அலுவலத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட ஆசிரியர்கள்,  தங்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரி முதன்மைக் கல்வி அலுவலரிடம் முறையீட்டனர்.

இது குறித்து  பாதிக்கப்பட்ட  ஆசிரியை  கூறுகையில், பள்ளிக்கு செல்லமுடியாது சூழல் உள்ளது , அந்த மாணவனுக்கு ஆதரவாக வெளியில் இருந்து சிலரை அழைத்து வருகிறான் . கேட்ககூடாத வார்த்தைகளை கேட்கும்போது , இதற்கா இந்த வேலைக்கு வந்தோம் என்று  ராம்போவே  அசிங்கமாகவும் கேவலமாகவும்  இருக்கிறது என கூறுகிறார்.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்  என்று கூறுவார்கள். இந்த உலகில் பிறக்கின்ற மனிதன் கல்வியறிவினை பெறாவிடின் அவன் வாழ்வில் பல நலன்களை அறியாது போகிறான்.

இக்கல்வியறிவனை போதிக்கின்ற ஆசிரியர்கள் போற்றுதலுக்குரியவர்கள் ஆவர். “மாதா பிதா குரு தெய்வம்” என்பவர்கள்  வாழ்வில் என்றைக்கும் முக்கியமானவர்கள் என்பதை மாணவர்கள் உணரவேண்டும்.