பள்ளி கேட் விழுந்து 3-ம் வகுப்பு மாணவி பலி

273
school-gate
Advertisement

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளி கேட் விழுந்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். மேலும், மற்றொரு மாணவன் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலையில் சீக்கிரமாக பள்ளியை அடைந்த குழந்தைகள் பள்ளி கேட்டில் ஊசலாடிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கேட் அவர்கள் மீது விழுந்தது.

இதில் 3-ம் வகுப்பு படிக்கும் வந்தனா, ரிஷப் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள், மாணவி வந்தனா இறந்துவிட்டதாக அறிவித்தனர். ரிஷப் பிரதாப்கரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்