அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வந்ததாக கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்…

163
Advertisement

சென்னை அண்ணா அறிவாயலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவவர்கள் 3 சதவிகிதம் அளவுக்கு தனியார் பள்ளிகளுக்கு சென்று விட்டதாக அமைச்சர் தெரிவித்தார். மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ஆயிரத்து 115 கோடி ரூபாய் நிலுவைத்தொகை இதுவரை வரவில்லை என்றும் அவர் கூறினார். அரசு நிர்வாகம் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு அ.தி.மு.க. ஆட்சி சிறந்த உதாரணம் என்றும்  அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம் செய்தார் .